உலகம்

எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கு காலக்கெடு

(UTV|இந்தியா) – இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலத்தின் காலக்கெடு, கடந்த 11ம் திகதியிலிருந்து, எதிர்வரும் 6ம் திகதி வரை ஏற்கனவே நீடிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் நிலவரப்படி எயார் இந்தியா நிறுவனம் 60,074 கோடி இந்திய ரூபாய் கடன் சுமையைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பலி எண்ணிக்கையில் பிரேசிலுக்கு இரண்டாம் இடம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்