வணிகம்

எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன

(UTV | கொழும்பு) – உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல நிறுவனம் (NIMH) உடன் இணைந்து Text-Based தளமான 1926ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது சிறந்த மனநிலையை ஊக்குவிப்பதற்கான ஒரு பிரத்தியேக உதவியளிக்கும் சேவை முறையாகும்.

இந்த சேவை எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதுடன் பிற கையடக்க நெட்வேர்க்குகளின் வாடிக்கையாளர்களுக்கும் பெற்றுக் கொள்ள முடியும். தேவைப்படும் பொழுது ஒரு பாவனையாளர் 1926க்கு எளிய முறையிலான Text-Based தகவலை மட்டுமே அனுப்ப வேண்டும், இதற்கு NIMHஇன் மனநல நிபுணர் ஒருவர் உடனடியாக பதிலளிப்பார்.

2020 உலக மனநல தினமான ஒக்டோபர் 10ம் திகதியிலிருந்து இந்த உதவியளிக்கும் சேவைத் தளம் இயங்குவதுடன் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கும் தொழில்முறை ஆலோசகர்களுடன் பாவனையாளர்களுக்கு இணைய முடியும்.

எயார்டெல்லின் ‘1926’ Text-based உதவி முறையானது அதிகமான இளைஞர்களை, தொழில் வல்லுநர்களை அணுகுவதற்கு ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது, குறிப்பாக அவர்கள் மன அழுத்தங்களை அனுபவிக்கும் போது மற்றும் பாதுகாப்பான மற்றும் அநாமதேய சூழலில் அவர்களின் மனநல கவலைகளுக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம்.

எயார்டெல்லினால் நிர்மாணிக்கப்பட்ட Video உரையாடல் கருவியான Airtel Blue Jeansஇல் இணைந்து கொண்ட பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான Ashish Chandra, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவது இளைஞர்களிடையே கற்றல், சமூக மயமாக்கல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை மாற்றியமைக்கின்றது. எங்களது இலச்சினை இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ஈடுபாடுள்ளதால் அவர்கள் டிஜிட்டல் முறையில் தொடர்புகளை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். பெரும்பாலும் நேரடியாகவோ அல்லது குறுந்தகவல்கள் மூலமாகவோ இதனை மேற்கொள்கின்றனர். எயார்டெல்லின், மனித தேவைகளுடன் தொழில்நுட்பத்தை சேர்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள இணைப்புக்களை உருவாக்குவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம், இது அத்தகைய செயற்பாடுகளுக்கான ஒரு முயற்சியாகும்.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த NIMHஇன் சிரேஷ்ட ஆலோசகர் மனநல வைத்தியர் டொக்டர் புஷ்பா ரனசிங்க, “2018இல் ‘1926’ Text-based உதவி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மக்களின் எண்ணிக்கையில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, பதட்டம், மனச்சோர்வு மன அழுத்தம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவியை நாடுவது மற்றும் அவர்களை மிக அருகிலுள்ள பராமரிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்புவது என்பதாகும்.” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மொபைல் போன்கள் மற்றும் குறிப்பாக குறுந்தகவல்களை அனுப்புவது இளைஞர்களிடையே விருப்பமான தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ளது, இது தொலைபேசிகளுடன் தொடர்புபட்ட கலாச்சாரத்தை உருவாக்குகிறது. சுகாதார நிபுணர்களாக, தொழில்நுட்பத்தை நம்பியிருப்பது முன்பைவிட இப்போது முக்கியமாகவுள்ளது. அதன் முன்னேற்றங்களின் விளைவாக உதவி தேவைப்படுபவர்களுக்கு அணுகக்கூடிய மேம்பட்ட வழிகளைக் கண்டறிய முடிகிறது. ‘1926’ ஒரு Text-Based உதவி முறையை உருவாக்க உதவிய எயார்டெல்லுக்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அதிக முதலீடுகள் மற்றும் அணுகல் மூலம் அனைவருக்கும் மன ஆரோக்கியத்தை நிவர்த்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது மனநல ஆலோசகர் ஷானுகி டி அல்விஸ், சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் மனநல மருத்துவருமான டொக்டர் புஷ்பா ரனசிங்க, உளவியலாளர் நிவேந்திர உதுமான் மற்றும் எயார்டெல் லங்காவின் மனித வள தலைவர் கனிஷ்க ரனவீர ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிகரித்து வரும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் கவலைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2018ஆம் அண்டில் NIMHஇனால் ‘1926’ தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Bharti Airtel Lanka வை பற்றி…

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

Related posts

புறக்கோட்டையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைவு

தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

மரக்கறி கொள்வனவிற்கு வரும் வர்த்தர்கள் குறைவு