வகைப்படுத்தப்படாத

எமனாக வந்த பாரவூர்தி:26 வயது இளைஞனும், 21 வயது யுவதியும் பரிதாபமாக பலி

(UDHAYAM, COLOMBO) – மீகாஹதென்ன – நெலுஹேன 6 தூண் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை ஹோரவல திசை நோக்கி பயணித்த உந்துருளியொன்று எதிர் திசையில் வந்த பாரவூர்தியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், யுவதி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பெலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரும், மீகாஹதென்ன பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் தற்போது நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகாஹதென்ன காவற்றை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

ஜேர்மனிய தூதுவரை நாட்டில் இருந்து வெளியேற்ற தீர்மானம்…

இந்தோனேசிய கவர்னர் கைது

Fmr. Deraniyagala Pradeshiya Sabha Chairman sentenced to 24-years RI