கேளிக்கை

எதிர்வரும் மே மாதம் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்…

(UTV|INDIA) கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Related posts

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

உலக பட விழாக்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ்

ஆசியாவின் முதல் பகிர் திரை திரைப்படம் ‘பிகினிங்’