வகைப்படுத்தப்படாத

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நேற்று மதியம் இந்த பேரணி ஆரம்பக்கப்பட்டு, புஞ்சி பொரளை, மருதானையைத் தாண்டி எதிர்பார்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்தியைத் தாண்டி ஒல்கொட் மாவத்தை ஊடாக ஜனதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தனர்.

எனினும் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காவல்துறையினர் வீதித்தடையை ஏற்படுத்தி இருந்தனர்.

அதனை தாண்டி செல்ல மாணவர்கள் முற்பட்ட நிலையில் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கோட்டை நீதவான் விதித்திருந்த பேரணிக்கான தடை உத்தரவை கோட்டை காவல்துறையினர், மாணவ ஒன்றியத்திடம் கையளித்தனர்.

எனினும் அதனை கிழித்த எறிந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையிலேயே தண்ணீர் மற்று கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Peradeniya Uni. Management Faculty to reopen next week

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்புகிறார்

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு