சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

(UTV|COLOMBO) இற்றைக்கு 71 ஆண்டுகளுக்கு முன்பு மேன்மை மிகு இலங்கையர் பலர் அதுவரை அனுபவித்த காலணித்துவம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனத் தீர்மாணித்தனர்.

அதனால் தான் இன்றைய இலங்கையானது, சுயாட்சியுடைய இறையாண்மை தேசமாக சுய ஆணையின் கீழான நீதி நெறிமுறைகளுக்கு அமைவாக இயங்கும் வல்லமையுள்ள தேசமாக திகழ்கிறது.

ஏமாற்றுத்தனங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக நாம் ஒரு தேசமாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே நமது தேசிய கொடி ஆனது உருவாக்கப்பட்டு, நமக்கே உரிய பன்முகதன்மையை நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள்.

அவர்கள் ஜாதி மத பேதமின்றி ஒருமித்து நின்று ஒன்றாக பயணித்து சுதந்திரத்தை வென்று அதனை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

 

 

 

 

 

Related posts

வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு- சினிமா பாணி-(VIDEO)

பாடசாலை – மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு