சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று கண்டியில் மக்கள் பேரணி

(UTV|COLOMBO) இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினால் கண்டியில் மக்கள் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.

பகல் 2.00 மணியளவில் கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

தேர்தலை பிற்போடுதல், நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ​கருத்து தெரிவிக்கப்பட உள்ளது.

மேலும் ,இந்த மக்கள் பேரணியில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று