அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர் ஹரிணி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேவைப்பட்டால், லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், நீதியை நிலைநாட்ட எடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

“எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு இதுதான். இன்றைய எமது நிலைப்பாடும் அதுதான்.

இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் அவளுக்கு உறுதியளிக்கிறேன்.

அதற்குத் தேவையான சுதந்திரம் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.” என்றார்.

வீடியோ

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு