உள்நாடு

ஊழியர் சேமலாப நிதி – தொழில் வழங்குநர்களுக்கு கடுமையான நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேற்று(13) தொழில் அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Related posts

தெற்காசிய சாதனையில் உஷான் திவங்க

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு