அரசியல்உள்நாடு

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்தல்

    2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்திய பின்னர் குறித்த சட்டத்துக்கு அமைய புலனாய்வு, வழக்கு தாக்கல் செய்தல், நிர்வாக ரீதியான மற்றும் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுக்கு கணிசமான சட்ட ரீதியான பொருள்கோடல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

    எனவே மேற்குறித்த சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சில பிரிவுகளை மேற்குறித்த சட்டத்தில் அறிமுகம் செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.

    அதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    Related posts

    580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்

    கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

    அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க தீர்மானம்

    editor