அரசியல்உள்நாடு

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

எதிர்வரும் பொது தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது.

இன்று இருக்கும் தேசிய கட்சிகள் ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்திருக்கின்றார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதில்லை. மாறாக புதிய முகங்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஊழலற்ற நேர்மையான அரசியல் வாதிகளை தேடுகின்றார்கள்.

இதன் அடிப்படையிலேயே இந்த தேர்தலில் 22 மாவட்டங்களிலும் நாங்கள் போட்டியிட இருக்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலிலே புதிய சக்தியாக எழுச்சி பெற எங்கள் வேலை திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

எவரும் எதிர்பாராத வகையில் எமது வெற்றி அமைய இருக்கின்றது. தமிழ் சிங்கள முஸ்லிம் என பல வேட்பாளர்கள் களமிறங்க தயாராக இருக்கின்றார்கள்.

நேர்மையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எங்களுடன் இணைந்து இருக்கின்றார்கள்.

தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் எனதுண வேட்பாளர்கள் நாட்டின் புதிய அரசியல் பாதையில் பயணிப்பார்கள்.

Related posts

திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO]

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

03 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு