உள்நாடு

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகளுக்கு பூட்டு

(UTVNEWS | KALMUNAI) -கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (25) தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் சன நெரிசலைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தைகள் மற்றும் கடைகளை திறக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தப்படுவதுடன் மக்கள் காலடியே சென்று மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பதற்கு நடமாடும் வியாபாரங்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணியின் இரண்டாவது கூட்டம் இன்று புதன்கிழமை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போதே நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் மேற்படி தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளன.

நாளை வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்ற வேளையிலும் மக்கள் நடமாட்டமின்றி, ஊரடங்கியிருப்பதன் மூலமே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எமது மக்களை பாதுக்காக்க முடியும் என்பதை ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடமையுடன் கவனத்தில் கொண்டு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணி மன்றாட்டமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.

Related posts

வேட்பாளர்களுடன் இணைந்து நிவாரண செயற்பாடுகளில் ஈடுபட அரச நிறுவனங்களுக்கு தடை

கைவிரிக்கும் LITRO மற்றும் LAUGFS நிறுவனங்கள்

குருணாகலின் முதாவது முஸ்லிம் MPஅலவி காலமானார்!