உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

(UTV | கம்பஹா) – மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மினுங்கொட பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய!

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 7 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு