உள்நாடு

ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்தும் நீக்குவதா / நீடிப்பதா

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஒன்றாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

சிசுவை ICU-வில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்!

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை