உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 18 மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தசுன் ஷானக நீங்கியமை தொடர்பில் விளக்கம் கூறும் கிரிக்கெட் நிறுவனம்!

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து

தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவித்தல்