உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,475 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) காலை 06 மணி முதல் இன்றைய தினம்(19) காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1,475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 368 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையிலான காலப்பகுதியில் 33,155 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரத்து 519 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச நிதியில் ஹஜ் சென்ற எம்பிமார்களும், குடும்பங்களின் தகவலும் அம்பலம் !

சுற்றுலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல்

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு