உள்நாடு

உள்ளூர் மசாலாப் பொருட்கள் சலுகை விலையில்

(UTV | கொழும்பு) – தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபா சந்தை பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதியொன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்வதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தூள், மிளகு, கறி மசாலாத்தூள், கடுகு, வெந்தயம் போன்ற முக்கிய மசாலாப் பொருட்கள் அடங்கிய சிக்கன மசாலாப் பொதியினை எதிர்வரும் வாரங்களில் ச.தொ.ச. விற்பனை நிலையங்களில் பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட “வாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு” தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

 

Related posts

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு

அநுரவின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது – உதய கம்மன்பில

editor