உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் !

(UTV | கொழும்பு) –  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக கடமையாற்றும் மாவட்ட செயலாளர்கள் வெளியிடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன் படி வேட்புமனுக்களைக் கோரும் காலம் 05 ஜனவரி 2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 10 பில்லியன். உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று வார இறுதி நாட்களில் நடைபெறாமல் வார நாட்களில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிந்து ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்