அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 13 வேட்பாளர்கள் கைது

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.

அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (06) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

வறுமைக் கோட்டை துல்லியமாக கண்டறிய வேண்டும் – சஜித் பிரேமதாச.