உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கூட உள்ளன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இன்று இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.

Related posts

நாட்டிற்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாலை

அரசியல்வாதி ஒருவர் அதிரடியாக கைது

editor

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor