உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய நயினாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்