வணிகம்

உலர்ந்த பழங்கள் இறக்குமதி செய்வத்தில அரசு அவதானம்

(UTV|COLOMBO) – உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அரசாங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

ரயில் பணிபுறக்கணிப்பு – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை