சூடான செய்திகள் 1

உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

(UTV|COLOMBO)-‘ஊடகம், நீதி, சட்ட ஒழுங்குகளை பரிசீலிக்கும் அதிகாரத்தை தக்கவைத்தல்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கான யுனெஸ்கோவின் பிரதான நிகழ்வு கானாவில் உள்ள அக்ராவில் இடம்பெறுகிறது.

பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19இல் இடம்பெற்றுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நினைவூட்டும் முகமாகவும், ஐக்கிய நாடுகளால் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக, ஆபிரிக்கப் ஊடகங்களால் கூட்டாக 1991ஆம் ஆண்டு இந்த நாளிலேயே ‘ஊடக சுதந்திர சாசனம்’ முன்வைக்கப்பட்டது.

இது 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26ஆம் அமர்வில் பரிந்துரை செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரின் கொலையின் பின்னரே ஊடக சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…