உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை

(UTV | பிரேசில்) – கொரோனாவால் தற்போது அதிக உயிரிழப்புக்களை சந்தித்து கொண்டிருக்கும் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரா விமர்சித்துள்ளதோடு, அதிலிருந்து விலக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரேசில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது,

“உலக சுகாதார அமைப்பு ஒருதலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் கூறும்போது, ”தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரேசில் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷில் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடிய சுரங்கப்பாதை

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 3,917,653 பேர் பாதிப்பு

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு