உலகம்

உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் பலி

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 119,086 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தற்போது 100 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இதற்கிடையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து இத்தாலி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ‘டுவிட்டர்’ நிறுவனம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

தென் கொரிய ஜனாதிபதி கைது

editor