விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- இந்திய அணி 15 ஆம் திகதி அறிவிப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அடுத்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் பங்கேற்க உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்த திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட உள்ளது. இந்தத் தெரிவு மும்பையில் இடம்பெறும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகிகள் குழு கூடி நேற்று இந்தத் தீர்மானத்தை எட்டியது. 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர் மே மாதம் 30ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது இந்தப் போட்டித் தொடர் ஜூலை 14–ந் திகதி வரை நடக்கவுள்ளது.

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களில் 48 போட்டிகள் நடக்கின்றன.

ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு போட்டிகளிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது..

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/ICC-WORLD-CUP-SCHEDULE-.jpg”]

 

 

 

 

 

 

 

Related posts

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி – ஜோகோவிச் தகுதிநீக்கம்

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்