உள்நாடு

உறுப்புரிமை நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட 115 நபர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(30) ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து 115 உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கட்சி தலைமையகம் நேற்று முன் தினம் (28) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அதனை தெரியப்படுத்தும் கடிதங்கள் இன்று தபால்மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலி

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு