உள்நாடு

உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீயினால் உயிரை விட்ட தாய் மற்றும் பிள்ளைகள்

(UTV | கொழும்பு) –  உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீயினால் உயிரை விட்ட தாய் மற்றும் பிள்ளைகள்

அனுராதபுரம், மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட திடீர் தீயினால் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டின் உரிமையாளரான சமந்தா ( 37) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வீட்டுக்கு வேறு வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததும், அந்த அறையில் பெட்ரோல் போத்தல் ஒன்று இருந்ததும் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தையடுத்து அயலவர்கள் சிறிது நேரத்தில் தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தாய் (30 வயது), மகள்(10வயது ) மற்றும் மகன் (05 வயது ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிடிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டியது.

editor

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்