உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

( UTV| கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவையும் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

சுப நேரத்தில் எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரிக்கை

MV Xpress pearl : உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு