உலகம்

உயிரிழந்த நடிகை பூனம் பாண்டே!

(UTV | கொழும்பு) –

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.

தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார். மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்திலும் ரசிகர்களுடன் உரையாடியும், புகைப்படங்கள் பகிர்ந்தும் ஆக்டிவ்வாக வலம் வந்தார்.

சர்ச்சைக்குரிய நடிகையாக பொலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, இன்று உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகம் முழுவதும் 42 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று – 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு

6 மாதங்களாக கொரோனா இல்லை – சாதனை படைத்த நாடு