கிசு கிசு

உயிரிழந்தும் அடக்காத நிலையில் கொரோனா சடலங்கள்

(UTV |  அமெரிக்கா, நியூயார்க்) – அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்படாமல் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதியில் கொரோனா பரவ தொடங்கிய நிலையில் இதுவரை உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவியதால் தினசரி 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இதில் அமெரிக்காவின் முக்கிய வணிக நகரமான நியூயார்க்கும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த பலரது உடல்கள் இதுநாள் வரையிலும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நியூயார்க் போலீஸார் “இறந்தவர்களின் உடல்களை உடனடியாக புதைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் அவர்களது உடல்கள் குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவை ஹார்ட் தீவில் புதைக்கப்படவோ அல்லது வேறு இடங்களில் புதைக்க விரும்பினாலோ நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளனர். மொத்தமாக 750 கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல் இவ்வாறாக பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related posts

விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்

நிரூபமா ராஜபக்ஷ துபாய் பயணம்

மைத்திரி – சந்திரிகா மோதல் உக்கிரம்