உலகம்

உயிரியல் பூங்காவில் தீ விபத்து – 30 குரங்குகள் உயிரிழப்பு

(UTV|GERMAN) – ஜெர்மனி உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள கிரபெல்டு நகரில் பழமைவாய்ந்த உயிரியல் பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த உயிரியல் பூங்காவில் குரங்குகளுக்கான பிரத்யேக சரணாலயம் திறக்கப்பட்டது. இதில் பல்வேறு இனங்களை சேர்ந்த 32 குரங்குகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குரங்குகள் சரணாலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் நேரத்தில் தீ, சரணாலயம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்நிலையில், .சரணாலயத்தில் இருந்த 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், 2 சிம்பன்சி குரங்குகள் மட்டுமே உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

உயிரியல் பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றியதே தீவிபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

Related posts

அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்தை சீனா விமர்சிப்பு

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.