சூடான செய்திகள் 1

உயர் நீதிமன்றில் இன்றும் தீர்மானமிக்க வழக்கு…

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு எதிராக மகிந்த தரப்பில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதேநேரம், குறித்த மேன்முறையீட்டு மனுவை முழுமையான நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி உயர்நீதிமன்றில் நேற்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர்களான புவனெக அலுவிஹாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இடம்பெறவுள்ளன.

இந்தநிலையில், நீதியரசர் ஈவா வனசுந்தர தவிர்ந்த முழுமையான நீதியரசர்கள் ஆயத்தினை இந்த விசாரணைகளுக்காக நியமிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தரப்பை அங்கத்துவப்படுத்தும் பிரதிநிதிகள் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவை ஆராய்வதற்காக முழுமையான நீதியரசர்கள் ஆயம் அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலை

காமினி செனரத் விடுதலை

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்