சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV|COLOMBO) 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை வழங்குவதற்காக காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கினங்க, முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கால வரையரை இந்த மாதம் 14ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அது மேலும் எதிர்வரும் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடிய குறித்த ஆணைக்குழுவில் மேலும் 3 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் அந்த முறைப்பாடுகளுக்குள் உள்ளடங்குகிறது.

 

 

 

Related posts

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி உரையாடல்