உள்நாடு

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு புதிய திட்டம்!

(UTV | கொழும்பு) –

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவு கொண்ட தொழில்சார் கல்வி குறித்த நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய நிகழ்ச்சி இவ்வாறு நடத்தப்படவுள்ளது.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் தரப் பரீட்சைக்காக தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முன்னர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் !