உள்நாடு

உயர் கல்விக்காக வெளிநாடு புறப்படும் மாணவர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கல்வி நோக்கத்துக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்று(02) முதல் அதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியாக இந்த முன்பதிவுகளை மேற்கொண்டதன் பின்னர், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன குறுந்தகவல் ஊடாக குறித்த மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

அதற்கமைய, பின்வரும் இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் ஊடாக (https://pre-departure-vaccine.covid19.gov.lk/) , உயர்க் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்

Related posts

தொடர்ந்தும் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் – பாதுகாப்பை வழங்கவேண்டும் – அர்ச்சுனா எம்.பி

editor

TIN இலக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு!