சூடான செய்திகள் 1

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(25) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் பின்னர் தபால் திணைக்களம் தமது ஊழியர்கள் ஊடாக அவற்றை வாக்காளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

காரணத்தினை வெளியிட்டார் விஜயகலா

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை