அரசியல்உள்நாடு

உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை செயலகத்திற்கு அருகாமையில் பாலதக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திலும், மன்றக் கல்லூரிக்கு அருகாமையிலும் வாகனங்களை நிறுத்திச் சென்றுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இன்று காலை பாலதக்ஷ மாவத்தையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திற்கு வந்திருந்தார்.

Related posts

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு – மிலிந்தமொராகொட.