வகைப்படுத்தப்படாத

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு

(UTV|INDIA)-உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும், உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை – 97, கடலூர் – 13, விழுப்புரம் – 255, நாமக்கல் – 7, ஈரோடு – 7, தஞ்சை – 10, சேலம் – 50, கொடைக்கானல் – 2, வேலூர் – 2, நெல்லை – 31, விருதுநகர் – 80, கோவை – 85, திருப்பூர் – 57, அரியலூர் – 14 என இதுவரை 786 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

Related posts

வருகிறது புதிய அலைவரிசை

Heavy rains in Japan cause deadly landslides and floods

දහ අටට අඩු දරුවන් එක් ලක්ෂ 15,000 ක් මත් පැනට ලොල් වෙයි