அரசியல்உள்நாடு

உண்மையான பௌத்தர்கள் என்ற வகையில் நாம் முஸ்லிம்களின் உரிமைக்காக முன் நின்றோம் – சஜித்

அனைத்து இன மதங்களையும் அனைத்து மக்கள் பிரிவுகளையும் பாதுகாப்போம். முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை எரிப்பதா நல்லடக்கம் செய்வதாக என்கின்ற பிரச்சினையின் போது உண்மையான பௌத்தர்கள் என்ற வகையில் பாராளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியில் சரி குரல் எழுப்பியது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும்.

ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயக்கவும் அன்று அச்சத்தில் பாய்ந்து தப்பி ஓடினார்கள். முஸ்லிம் மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே போராட்டங்களை முன்னெடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சிங்கள, தமிழ், பர்கர், மலே உள்ளிட்ட அனைத்து இனங்களையும், அனைத்து மதங்களையும் பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளே உருவாகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 61 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி கல்குடாவில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாம் ஆரம்பித்த அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர் நிறுத்தினார். செப்டம்பர் 21 ஆம் திகதி தாம் வெற்றி பெற்ற பின்னர் இன மத பேதங்களின்றி மீண்டும் அந்த வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிப்போம்.

வீடுகள் காணிகள் இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்காக கம் உதாவ, நகர உதாவ வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வீடுகளை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மையப்படுத்தியதாக தனியான உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி, அதனூடாக தொழில் வாய்ப்பில்லாத இளைஞர் யுதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவோம்.

அத்தோடு இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஆரம்பித்து கணினி விஞ்ஞானம், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொழிக்கல்வி என்பனவற்றையும் வழங்குவோம். அதன் மூலம் நாடு பூராகவும் அறிவை மையப்படுத்திய பொருளாதாரக் கட்டமைப்பு முறை ஒன்றை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வித்துறைக்கும் சுகாதாரத் துறைக்கும் சகல வசதிகளையும் வழங்கி, வைத்தியசாலை கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாக மக்களின் வாழ்க்கை மட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்காக உர மானியத்தையும், யானை மனித மோதலுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

இலங்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் மோசடி – முதலில் அதை சுத்தம் செய்யுங்கள் – பந்துல குணவர்தன

editor

UNICEF தனது அறிக்கை தொடர்பில் வருத்தத்தினை தெரிவித்தது