சூடான செய்திகள் 1

உண்மைக்குப் புறம்பான செய்திகள் – பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அபகீர்த்தி

(UTV|COLOMBO)-உண்மைக்குப் புறம்பான சில செய்திகள் வெளியாவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் பொதுவாக நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று இதனை தெரிவித்து சபாநாயகர் திறைசேரி பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட சில அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்பதனால் அந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பல்வேறு ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவம் சபாநாயகர் கூறினார்..

 

குறிப்பிட்ட அறிக்கையின் சி 350, முதல் 360 வரையான பக்கங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது மொத்த ஆவணங்களில் ஒரு பகுதி மாத்திரமே ஆகும். அதனால், நேற்று  நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்றுச் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டபடி முழுமையான ஆவணம் கிடைக்கப் பெற்றதும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் போலி ஊடக கருத்துக்கள் மூலம் பாராளுமன்றத்தையும் அதன் உறுப்பினர்களையும் அபகீர்த்திக்கு உள்ளாக்க வேண்டாமென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய அனைத்து தரப்புக்களையும் கேட்டுள்ளார்.

 

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைதொடர்பில் போலிச் செய்திகள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து