வகைப்படுத்தப்படாத

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – உடுவே தம்மாலோக தேரரை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த தேரர் வசிக்கும் கொழும்பு 05 எலன் மெதினியாராம விகாரையினுள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெக்கியை இயக்கியமைக்கு எதிராக பிரதேசவாசிகள் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2 முறை இந்த வழக்கில் முன்னிலையாகுமாறு உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்

Minister Harin asks SLC to overhaul team’s coaching staff

தேசிய அணியைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு போஷாக்குக் கொடுப்பனவு