உலகம்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை

உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில் ,

உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

உக்ரைனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவினாலும் அமெரிக்காவை போல் ஆயுதங்களை வழங்க முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இதற்கிடையே ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. ட்ரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஸெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் இன்று ஐரோப்பிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.

இதன்மூலம் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தைப் பெற ஐரோப்பியத் தலைவர்கள், உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.

Related posts

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி

அவுஸ்திரேலியாவில் முகநூலில் செய்திகள் பகிரும் வசதி முடக்கம்

5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்