உலகம்

உக்ரைனின் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்

(UTV |  உக்ரைன்) – உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.

Related posts

WTO-வின் முதல் பெண் தலைவராக நிகோசி நியமனம்

மோடியும் குத்திக் கொண்டார்

கொவிட் 3வது டோஸ் செலுத்த அவசரமில்லை