உலகம்

உக்ரேன் நெருக்கடி தொடர்பான ரஷ்ய – அமெரிக்க மாநாடு

(UTV | ஜெனீவா) – உக்ரேன் நெருக்கடி தொடர்பான ரஷ்ய – அமெரிக்க மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது.

ரஷ்ய – அமெரிக்க மாநாட்டை எதிர்வரும் 24 ம் திகதி சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனின் யோசனைக்கு அமையவே குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே மாநாடு இடம்பெறும் தினம் நேரம் மற்றும் காலம் என்பன தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பு யோசனைகளை கலந்துரையாடலின் போது முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு அது தொடர்பில் சிறு முன்னேற்றம் காணப்படுவதாக ரஷ்ய வெளிவிகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

டுவிட்டர் தளம் முடங்கியது

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் சாத்தியம்