வகைப்படுத்தப்படாத

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

(UTV|IRAN)-ஈரானில் போயிங் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, ஈரானுக்கு போயிங் 707 ரக சரக்கு விமானத்தில், விமானிகள் உள்ளிட்ட 10 பேர் பயணம் செய்தனர்.

அந்த சரக்கு விமானம் ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியதும் விமானம் தீப்பிடித்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

நாவலப்பிட்டியில் மரவள்ளி கிழங்கு (மரம்) தோட்டத்தில் இருந்த 109அடி நீளம் மலைப்பாம்பு

பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது