உலகம்

ஈரானிய படையினருக்கு ஆயிரம் அதிநவீன ட்ரோன்கள்

மூலோபாயப் பணிகள் மற்றும் நீண்ட தூர நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் அதிநவீன ட்ரோன்களை ஈரான் இஸ்லாமியக் குடியரசு இராணுவம் தமது போர் படையினருக்கு நேற்று வழங்கியுள்ளது.

ஈரான் பாதுகாப்பு படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரகீம் மௌசவியின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே பங்குபற்றுதலோடு இந்த ட்ரோன்கள் கையளிக்கப்பட்டன.

இந்த ஆளில்லா வான்வழி வாகனங்கள் இரண்டாயிரம் கிலோ மீற்றர்களுக்கும் மேற்பட்ட தூரம் பயணிக்கக்கூடியதும் அதிக அழிவுகளை ஏற்படுத்தக்கூடியதும் கூட.

சிறப்புப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் மூலம் உளவு மற்றும் எல்லை கண்காணிப்பு திறன்கள் மேம்பாடு அடையும். அத்தோடு தொலைதூர இலக்குகளுக்கு எதிரான இராணுவத்தின் நீண்ட தூர தாக்குதல் சக்தியையும் வலுப்படுத்தும் என்றும் ஈரானிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கினால் 40 பேர் உயிரிழப்பு!

உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில்

மாற்று மத திருமணத்திற்குஅனுமதி