சூடான செய்திகள் 1

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-அம்பலாந்தோட்டை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பை அடிப்படை வேதனத்துடன் சேர்த்தல் மற்றும் 750 ரூபாய் தினசரி வேதனத்தை பெறும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அம்பலாந்தோட்டை டிப்போவில் இருந்து 59 பேரூந்துகள் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை என அதன் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறைவு

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…