உலகம்

இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் ஆரம்பியுங்கள் – ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு

ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு புரட்சிகர காவலர் உறுப்பினர்கள் உட்பட, பெயரிடப்படாத மூன்று ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகம் தகவல் புதன்கிழமை காலை ஹனியே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் கமேனி இந்த உத்தரவை வழங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், “ஈரானிய இராணுவத் தளபதிகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவிற்கு அருகிலுள்ள இராணுவ இலக்குகள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் மற்றொரு கூட்டுத் தாக்குதலைப் பரிசீலித்து வருகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதில் உறுதியாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

ஈரானும் ஹமாஸும் இஸ்மாயில் ஹனியை இஸ்ரேல் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளன. காசா பகுதியில் ஹமாஸுடன் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ஈரானின் புதிய அதிபராக பதவியேற்பதற்காக தெஹ்ரானில் இருந்த ஹனியேவைக் கொன்றதை ஒப்புக்கொள்ளவோ ​​மறுக்கவோ இல்லை.

ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் உட்பட வெளிநாடுகளில் எதிரிகளை கொன்று குவித்த நீண்ட வரலாற்றை இஸ்ரேலுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளவில் கொவிட் :19 ஒரு கண்ணோட்டம்

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்