உலகம்

இஸ்ரேல் இராணுவத்தினால் காசாவில் 130 சுரங்கங்கள் அழிப்பு!

(UTV | கொழும்பு) –

காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் போராளிகளால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன.
அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு, மற்ற வீரர்களுடன் இணைந்து காசாவிலுள்ள ஹமாஸ் போராளிகளின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்தக் குழுவினர் சுரங்க நிலைகளின் இருப்பிடங்களைக் கண்டறிவது, அதனை வெடிவைத்து தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் இராணுவத்தின் தரைவழித் தாக்குதல் நடவடிக்கை பூமிக்கு அடியில் ஹாமஸ் போராளிகள் அமைத்துள்ள உட்கட்டமைப்பை தகர்த்து வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

‘ஈரான் பயணம் உலக அரங்கில் புதின் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது’